Editorial / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
இரண்டு குழுக்களுக்கிடையில் இம்மாதம் 20 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் மதுபோதையில் ஏற்பட்ட பிரச்சினையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் கைதான ஐவரும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்காக பொறுப்பேற்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக, முதலில் 21ஆம் திகதி, துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைதான நிலையில், அவரது வாக்குமூலத்துக்கமைய 4 சந்தேக நபர்களை, சம்மாந்துறை பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்தக் கைது நடவடிக்கையை, நீதிமன்ற உத்தரவின் படி, சம்மாந்துறை குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர் முன்னெடுத்த நிலையில், தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் கைதான பிரதான சந்தேக நபருடன் நெருங்கிப் பழகிய அப்பகுதி இராணுவ கெப்டன் தர அதிகாரி ஒருவருக்கு, தற்போது வட பகுதிக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இராணுவ அதிகாரிக்கு, பிரதான சந்தேகநபர் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கொள்வனவு செய்து கொடுத்துள்ளதுடன், அவ்வப்போது பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார்.
மேற்படி சம்பவத்தில் கைதானவர்கள் அனைவரும் 26, 38 , 42, 40, 27 வயதை உடையவர்களாவர்.
இவ் ஐந்து சந்தேக நபர்களும் குறித்த துப்பாக்கியை மறைத்து வைக்க ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டு அடிப்படையிலும் துப்பாக்கியை தன்வசம் உரிமையாக வைத்திருந்து பாதுகாத்தமை குற்றச்சாட்டுக்காகவும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பாகவும் ஏதாவது பயங்கரவாத குழுவினருடன் தொடர்புள்ளமை தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026