2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கி மீட்பு விவகாரம்; மேலும் மூவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

துப்பாக்கி சூடு நடத்திய சந்தேகநபரின் வாக்குமூலத்துக்கமைய மேலும் 3 சந்தேகநபர்களை, சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை  குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர் முன்னெடுத்த தொடர்விசாரணையின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்று (24) மாலை குறித்த மூவரும்  கைதாகினர்.

42, 40, 27 வயதுடைய இம்மூன்று சந்தேகநபர்களில் இருவர், குறித்த துப்பாக்கியை மறைத்து வைக்க ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டு அடிப்படையிலும் மற்றையவர் துப்பாக்கியை தன்வசம் உரிமையாக வைத்திருந்து பாதுகாத்த குற்றச்சாட்டுக்காகவும் கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் பிரதான சந்தேகநபர் உள்ளடங்குவதாகவும் செங்கல் வாடி, இறைச்சிக்கடை உரிமையாளர் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து வெளியாகியுள்ளது.

இதேவேளை, துப்பாக்கி சூடு நடத்தியவர், துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட சந்தேக நபருக்கு சூட்டுபயிற்சி வழங்கியவர் என சந்தேகத்தில் இருவர், ஏற்கனவே சம்மாந்துறை பொலிஸாரால் கைதாகியமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .