Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சலீம் றமீஸ்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினமும், பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 24ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு கொண்டாடும் விழாவும், பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழிப் பீடத்தின் கேட்போர் கூடத்தில், நாளை (23) பிற்பகல் 02 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பல்ககைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்எம்.எம்.நாஜீம் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
பதிவாளர் எச்.அப்துல் சத்தார், பீடங்களின் பீடாதிபதிகள், பகுதித் தலைவர்கள். விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்களும் மாணவர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
பல்கலைக்கழக கலை, கலாசாரப் பீடத்தின் தமிழ் மொழித்துறை பேராசிரியர் எம்.ஏ.எம். றமீஸ் அப்துல்லாஹுவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வின் போது, பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத் துறைப் பிரிவின் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸீலால், பல்கலைக்கழக ஸ்தாபகரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் எம்.எச்.எம்.அஷ்ரப் தொடர்பான நினைவுச் சொற்பொழி ஆற்றப்படவுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் எம்எம்.எம். நாஜீமின் ஆலோசனைக்கமைவாக இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago