2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழக உள்ளக வீதி அபிவிருத்தி

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள உள்ளக வீதியொன்று, காபட் வீதியாக செப்பனிடப்பட்டு வருகின்றன.

இப்பல்கலைக்கழகத்தின் போக்குவரத்துக்காக அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த உள்ளக வீதி, நீண்ட காலமாக சிதைவடைந்து காணப்பட்டது.

இதனைச் செப்பனிடுவதன் மூலமாக பல்கலைக்கழக மாணவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துச் சிரமத்தைக் கருத்திற்கொண்டு, உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான நிதி ஒதுக்கப்பட்டது.

சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம், 760 மீற்றர் தூரம் கொண்ட குறித்த உள்ளக வீதியின் காபட் இட்டு செப்பனிடும் நடவடிக்கையை, பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து உள்ளக வீதிகளையும் செப்பனிடுவதற்கான முயற்சிகளைத் தாம் மேற்கொண்டு வருவதாகவும், இதற்கென அரசாங்கத்தின் உதவியை நாடி பல்வேறு செயற்றிட்டங்களைத் தயார்படுத்தி வழங்கியுள்ளதாகவும் உபவேந்தர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X