எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பீடங்களுக்கிடையிலா இவ்வாண்டுக்கான உள்ளக கலாசார மற்றும் சித்திரக் கண்காட்சி நிகழ்வுகள், பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இன்று (19) நடைபெற்றன.
மாணவ நலன்புரி அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி ஏ. றமீஸ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சிக் கூடத்தை, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, அங்குராப்பணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தர், பீடாதிபதி பௌசுல் அமீர், பிரதிப் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர், பதில் நூலகர் திருமதி எம்.எம். மஸ்றூபா மற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சித்திரக் கண்காட்சி கூடங்கள் ஐந்து அமைக்கப்பட்டிருந்ததோடு, மூவின மாணவர்களின் கலை, கலாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவை அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
20 minute ago
31 minute ago
38 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
38 minute ago
57 minute ago