எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளனவென, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், இன்று (18) தெரிவித்தார்.
கடந்த 44 நாட்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பால், பல்கலைக்கழக அனைத்துச் செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன என்பதோடு, கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, கல்விசாரா ஊழியர்கள், நேற்று முன்தினம் (17) முதல் பல்கலைக்கழகத்தில் தமது கடமைகளில் ஈடுபட்டுள்ளனர் என அவர் கூறினார்.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 05 கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். கல்விசாரா ஊழியர்களின் கொடுப்பனவுகளை 10 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பான சுற்றுநிபத்தைவெளியிட எடுத்த தீர்மானத்துக்கு அமையவே, பணிப்புறக்கணிப்புத் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதென, பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.வை. முபாறக் தெரிவித்தார்.
"எமது கோரிக்கைகளுக்கு, 3 மாதங்களுக்குள், உயர் கல்வியமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் தீர்வு வழங்காவிடின், மீண்டும் 3 மாதங்களுக்குப் பின்னர், தொடர்ச்சியானபணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்" என, அவர் தெரிவித்தார்.
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago