Princiya Dixci / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தால் நடாத்தப்படவிருந்த 2014/2015ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் வருட, முதலாம் பருவ கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக், இன்று (08) அறிவித்தார்.
நாளை மறுதினம் (10) முதல் நடத்தப்படவிருந்த மேற்படி பரீட்சைகள், தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
இந்தப் பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும், உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் மேலும் தெரிவித்தார்.
14 minute ago
5 hours ago
7 hours ago
11 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago
7 hours ago
11 Mar 2026