Editorial / 2021 டிசெம்பர் 30 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
இப்பட்டமளிப்பு விழா நிகழ்வுகள், பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில், நான்கு நாள்களுக்கு ஐந்து அமர்வுகளாக நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளன.
முதல் அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள், பொறியியல் ஆகிய பீடங்களைச் சேர்ந்த 474 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இரண்டாம் நாள் அமர்வில் கலை, கலாசார பீடத்தைச் சேர்ந்த 566 மாணவர்களும் மூன்றாம் நாள் அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 642 மாணவர்களும் தமது பட்டங்களைப் பெறவுள்ளனர்.
நான்காவது அமர்வில் முகாமைத்துவ - வர்த்தக பீடத்தைச் சேர்ந்த 619 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. ஐந்தாவது அமர்வில் கலை கலாசார, முகாமைத்துவ - வர்த்தக பீடங்களில் இணைந்து கல்வி கற்ற 312 வெளிவாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், வியாபார நிர்வாகம், முகாமைத்துவம், தமிழ் உள்ளிட்ட துறைகளில் பட்டப்பின்படிப்புக்களை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதுமாணி, முதுதத்துவமாணி பட்டங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2 minute ago
9 minute ago
20 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
9 minute ago
20 minute ago
49 minute ago