Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா

தென்கிழக்குப் பல்கலைக் கழக கலைப்பிரிவு பயிலுனர் பட்டதாரிகளின் மூன்றாவது ஆய்வு மாநாடு இன்று புதன்கிழமை பல்கலைக்கழக கலை, கலாசாரப் பீடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பல்கலைகக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ஏ.றமீஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வு மாநாட்டுக்கு, பல்கலைக் கழகத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்திhர்.
ஆய்வு மாநாட்டுக்கு, பிரதம பேச்சாளராக ஒக்போர்ட் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் சர்மா வெத முனி கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், கலை, கலாசார பீடத்தின் இணைப் பாளரும், ஆய்வு மாநட்டுக்கான இணைப் பாளருமான சி.எம்.எம்.மன்சூர் மற்றும் பல்கலைக் கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
'கலாசார பன்மைத்துவத்தைப் பாதுகாத்து வேறுபாடுகளைக் கலைந்து எதிர்கால சந்ததியினரை உருவாக்குதல்' எனும் கருப்பொருளில் அமைந்த இவ்வாய்யு
மாநாட்டில் கலாசார பன்மைத்துவம், பொருளாதாரம், இனநல்லிணக்கம், அரசியல, வரலாறு உள்ளிட்ட 110 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இதன் போது சமர்க்கப்பட்டிருந்தன.
இதன் ஆரம்ப நிகழ்வில் அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதுடன், ஆய்வு
மாநாட்டின் நினைவு மலர் வெளியட்டு வைக்கப்பட்டதுடன் அதிதிகளுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
10 minute ago
25 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
35 minute ago