2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து மரணம்

Freelancer   / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேங்காய் பறிக்க  தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் ஒருவன் தவறி  விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அம்பாறை  மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்   பிரதேசத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

நிந்தவூர்-8  அல்மினன் வீதியைச் சேர்ந்த 25  வயதுடைய  முஹமட் அன்சார் முகமட் ஆசாத்  என்ற  இளைஞனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் கடற்றொழில் மேற்கொள்பவர் என தெரியவந்துள்ளது.

இன்று விடுமுறை தினம் என்பதால் தேங்காய் பறிப்பதற்கு   சென்று   உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறிக்கும் போது தென்னை மரத்தின் காய்ந்த ஓலையொன்றைப் பிடித்தபோது  கால் வழுக்கி சுவரில்  விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக  எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.


பாறுக் ஷிஹான் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .