2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘தெரிவுக்குழுவின் பணிகள் தொடர வேண்டும்’

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்   

மூன்று குடும்பங்கள் மாத்திரமே செய்த படுபாதகச் செயலின் சூத்திரதாரிகள் இனங்காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, அதற்குச் சரியான தெரிவு நாடாளுமன்ற தெரிவுக் குழுதான் என்றும் எனவே, குறித்த குழுவை இடைநிறுத்துவதற்கு எந்த அரசியல் சக்தியும் முனையக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.   

அம்பாறை- வெல்லாவெளி பிரதேசத்தில், தையல் பயிற்சியை நிறைவு செய்த யுவதிகளுக்கு, தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு, அமைச்சரின் இணைப்பாளர் எம்.கண்ணன் தலைமையில், வெல்லாவெளி கலாசார மண்டபத்தில், இன்று (16) நடைபெற்றது. சுமார் 18 இலட்சம் ரூபாய் நிதிஒதுக்கீட்டில், தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,   

தெரிவுக்குழுவின் பணிகளை மூடி மறைக்கும் வேலைத்திட்டங்களில், ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது வேறு எந்த அரசியல் தலைமைகளோ ஈடுபடக் கூடாது என்றும் தெரிக்குழுவின் பணிகள் தொடர்வதற்கான அழுத்தத்தை, பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X