Freelancer / 2023 பெப்ரவரி 15 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு
கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், பெண்ணொருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக குடுபத்தினர் தெரிவிக்கையில், கொழும்பு - வம்பலப்பிடடியில் உள்ள சகோதரி சுகவீனமடைந்த நிலையில் சகோதரின் சுகநலம் விசாரிப்பதற்காக நேற்று செவ்வாய்க்கிமை மாலை 5 மணியளவில் திருக்கோவிலில் இருந்து அவர்களுடைய காரில் கொழும்பு நோக்கி பயணமாகியுள்ளனர்.
இந்நிலையிலேயே கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இரு சகோதரர்களும் உயிரிழந்துள்ளனர்.
திருக்கோவிலைச் சேர்ந்தவரும் கனடாவில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருந்த தங்கராசா நாகசுந்தரம் (70 வயது) மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த அவரது சகோதரர் தங்கராசா கேதாரவரதசுந்தரம் (74 வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்த நாகசுந்தரத்தின் மனைவி சாருமதி மற்றும் உயிரிழந்த கேதாரவரதசுந்தரத்தின் மகன் ஜசிகாந்த ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (N)

3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025