2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தேசிய பாடசாலையாக தரமுயர்த்துமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள 1,000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்ததும் திட்டத்தின் கீழ், ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தையும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக்குட்பட்ட இப்பாடசாலை, ஒலுவில் பிரதேசத்தில் ஒரு தாய்ப் பாடசாலையாக 01 ஏபி தரத்தில் இயங்கி வருகின்றது.

சுமார் 2,500 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலை, நூற்றாண்டைக் கடந்துள்ள நிலையில், தேசிய பாடசாலையாக தரமுயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இப்பாடசாலையில் இருந்து வருடாந்தம் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்களின் தொகையும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டும் பொதுமக்கள்,  ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தையும் உள்வாங்கி, தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளனர். 

நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் காணப்படுகின்ற இப்பாடசாலை, மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம் அபிவிருத்தி அடையுமெனவும், இதனூடாக இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சி மேலும் வளர்ச்சியடையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .