2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தேசிய மட்டப்போட்டிக்கு நிந்தவூர் அல் அஷ்ரக் தெரிவு

Editorial   / 2019 ஜூலை 09 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரீ.கே.றஹ்மத்துல்லா

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசியப் பாடசாலை விவாதக் குழு அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் தினப் போட்டியில் விவாத பிரிவில் பங்குபற்றி முதலாம் இடத்தினை பெற்றதன் மூலம் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.ஜாபிர் நேற்று(09) தெரிவித்தார். அக்கரைப்பற்று அக்/இராமகிருஷ்ண மிஷன் தேசிய பாடசாலையில் நடைபெற்ற இப்போட்டியில் தி/கோணேஷ்வர மஹா வித்தியாலயத்தையும் மட்/வின்ஷன்ட் வித்தியாலத்தையும் எதிர்த்து  நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசியப்பாடசாலை விவாத அணி போட்டியிட்டு வெற்றி பெற்றதன்மூலம்  தேசிய மட்ட போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இம்மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு   பாடசாலை காலை ஆராதனையின் போது நடைபெற்றது.   இவ் விவாத போட்டியில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் மாணவர்களான எம்.என். ஹசான் அக்தர் , ஏ.எல். முஸ்பிர் அஹமட், எம்.எ.எ.அக்காஸ்மொஹம்மட் ஆகியோர் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X