2025 மே 15, வியாழக்கிழமை

‘தேர்தல் முறைகேடு; கவனமெடுக்கவும்’

Editorial   / 2020 ஜூன் 22 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.இர்ஸாத்

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அம்பாறை, அக்கரைப்பற்று பகுதியில் தேர்தல் முறைகேடுகள் இடம்பெறவதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்று மாநகர, பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளின் சில இரவு, பகல் பாராது கொங்ரீட் இடப்படுகின்றன எனவும், இவ்வீதிகள் போடப்படுகின்ற நேரங்களில் மாநகர, பிரதேச சபை உறுப்பினர்கள் விஐயம் செய்து, இவ்அபிவிருத்தியை தாங்கள் கொண்டு வந்ததாகவும் தங்களது அபிவிருத்திகளாகவும் கூறி வாக்குச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபடுவதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தலொன்று நடைபெற இருக்கின்ற காலப் பகுதியில் இதுவொரு பாரிய  தேர்தல் முறைகேடு என, தேர்தல் ஆணையாளரிடமும் சுயாதீன தேர்தல் கண்காணிப்புக் குழுவான கெபேயிடமும் வேட்பாளர்கள் சிலர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனை உடனடியாக நிறுத்தி, தேர்தல் நடவடிக்கைகளை சுயாதீனமாக நடத்ததுமாறு, எதிர்கட்சியினரும் ஏனைய கட்சியினரும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கின்றர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .