2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேர்தல் முறையை மாற்ற முஸ்தீபுகள்; மீளாய்வு செய்யவும்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 19 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முஸ்தீபுகளை மேற்கொண்டு வருகின்றது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீளாய்வு செய்ய வேண்டுமென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உள்ளூர் மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், சுமார் 02 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் புதிய பொது நூலக கட்டடம், நேற்று முன்தினம் (17) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “நாட்டில் நல்லொரு சுழல் ஏற்பட்டிருக்கின்றது. இனி ஒருபோதும் நாட்டில் இனவாதம் தலை தூக்கமாட்டாது என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

“அம்பாறை மாவட்டத்தில் மூன்று சமூகங்களும் ஒற்றுமையாக வாழந்து வரும் காலகட்டத்தில் சில இனவாதிகள் இன முறுகல்களை ஏற்படுத்துவதற்கு எத்தனித்து வருகின்றார்கள். இதனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முறியடித்து, சுமூகமான நிலையை ஏற்படுத்தி வருகின்றது.

“ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

“ஒலுவில் துறைமுகத்தை துறைமுக அதிகார சபையினர் மீன்பிடித் துறைமுகமாக மாற்றி, மீன்பிடித் துறைமுக திணைக்களத்துக்கு ஒப்படைத்துள்ளனர். இதில் தனியாருக்கு தொழிற்சாலை அமைப்பதற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மீளாய்வு செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .