2025 மே 02, வெள்ளிக்கிழமை

தொற்றா நோய் குறித்து விழிப்புணர்வு

பைஷல் இஸ்மாயில்   / 2018 மார்ச் 27 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொற்றா நோய்யால், 2017 ஆண்டில் மட்டும் ஒரு இலட்சத்து 37 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும், விபத்துகளால் 3,017 பேரும் உயிரிழந்துள்ளார்கள் எனவும்  இவ்வாறான உயிரிழப்புகள் எமக்கு பாரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்துகின்றது என்றும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எம்.அஸ்லம் தெரிவித்தார்.

 

“வரும் முன் காப்போம்” எனும் தொனிப் பொருளில், அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ளவர்களுக்கான தொற்றா நோய் விழிப்புணர்வு நிகழ்வு, அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை கேட்போர் கூட்ட மண்டபத்தில் இன்று (27)  இடம்பெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இயந்திர மயமாக்கப்பட்ட வாழ்க்கை வட்டத்துக்குள் இன்று மனிதர்கள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர். அந்தளவுக்கு தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது. இதனால் எமது வேலைகளை மிக இலகுவாக செய்யக்கூடியதாக இருந்தாலும் அதைவிடக் கூடியளவு நோய்களை எமது உடலுக்குள் உள்வாங்கக் கூடியவர்களாக நாம் மாறிவருகின்றோம்.

“இவ்விடயத்தை, நாம் அறிந்தும் அறியாதவர்களாக இருந்துகொண்டு, இந்த வாழ்க்கை வட்டத்திலிருந்து வெளியேற முடியாதவர்களாக சிக்கித் தவிக்கின்றோம். இதிலிருந்து விடுபடுவதென்பது மிகக் கஷ்டமான காரியமாகும். அந்தளவுக்கு எமது உடல் நிலை பழக்கத்துக்கு வந்துவிட்டது.

“இதிலிருந்து நாம் வெளியேறினால் மாத்திரமே, எமது ஆயுளை நீடித்துக்கொள்ள முடியும். இல்லை என்றால் எமது ஆயுள் மிகக் குருகியதாக மாறிவிடும்.

“அளவுக்கு அதிகமான உணவும், போஷாக்கு குறைந்த உணவுப் பழக்கத்தால் நாம் தொற்றா நோய்க்கு ஆளாகுவதுடன், எமது பிள்ளைகளையும் போஷாக்கு அற்ற பிள்ளைகளாக ஆளாக்கி விடுகின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .