2025 மே 12, திங்கட்கிழமை

தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம்; அவதானமாக செயற்படவும்

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா


  வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காரணமாக கிழக்கு மாகாணத்தில் பலத்த மழையுடன் கூடிய காலநிலையால், ஏற்பட்டுள்ள வெள்ள  அனர்த்தங்களால்,தொற்று நோய்   ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம். இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

 பெய்துவரும் தொடர் அடை மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள வீதிகள் மற்றும் குடியிருப்பு பிரதேசங்கள்   வெள்ளத்தில் மூழ்கியதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 இதன் காரணமாக சிறுவர்கள், முதியோர்களுக்கு, காய்ச்சல், தலைவலி, தடிமன், வயிற்றோட்டம் மற்றும் தொற்று நோய்களும் பரவக்கூடிய அபாயம் அதிகம் உள்ளதால் மக்கள அவதானத்துடனும், முன்எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
 வயோதிபர்கள், குழந்தைகளை குளிரான காலநிலையிலிருந்து பாதுகாப்பளிக்குமாறும், கொதித்தாறிய நீரை பருகுவதுடன், குழந்தைகளின் ஆடைகளைத் தொற்று நீக்கிச் சுத்தம் செய்வதுடன், வெள்ள நீர் தேங்கி நின்ற

வீடுகள் மற்றும் வசிப்பிடங்களையும், உணவுப் பாத்திரங்களையும்  தொற்று நீக்கிச் சுத்தம் செய்துகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,நாட்டில் டெங்கு பெருகும் இடங்களை கண்டறிந்து அவற்றை சுத்தம் செய்துகொள்வதுடன், சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்திருக்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X