2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தொழில் சந்தை பிற்போடப்பட்டுள்ளது

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன் ஹரன், எம்.எஸ்.எம். ஹனீபா

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் அம்பாறை மாவட்டச் செயலக தொழில் நிலையமும் இணைந்து, அம்மாதம் 15ஆம் திகதி நடத்தவிருந்த தொழில் சந்தை பிற்போடப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்டத் தொழில் நிலைய உத்தியோகத்தர் என். கங்காதரன் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டுக்கான மாபெரும் தொழில் சந்தை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நடைபெறவுள்ள புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாவட்டத் தொழில் நிலைய உத்தியோகத்தர் தெரிவித்தார்.

இத் தொழில் சந்தையில், தொழில் வழிகாட்டல்கள், தொழில் திறவுகோல் வேலைத்திட்டம், திறன் அபிவிருத்தி தொடர்பான விளக்கங்கள், அரச தொழில் பயிற்சி நிறுவனங்களின் சுயதொழில் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், உளவள ஆலோசனை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நடைபெறவுள்ளன.

இதில், அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள  தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகள் தங்களது சுய விபரக் கோவைகளுடன் வருகை தருவதன் மூலம் தங்களுக்கு விருப்பமான வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் பயிற்சிகளை பெற்றுக் கொள்ள முடியும் என அம்பாறை மாவட்ட தொழில் நிலைய உத்தியோகத்தர் என். கங்காதரன் தெரிவித்தார்.

மேலதிக விவரங்களுக்கு, 0771578330 அலைபேசியினூடாக அம்பாறை மாவட்டத் தொழில் நிலைய உத்தியோகத்தர் என். கங்காதரனைத் தொடர்புகொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X