Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அம்பாறை, அட்டாளைச்சேனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாயலுக்கும் மஸ்ஜிதுல் பலாஹ் கலாச்சார மண்டப நிர்மாண பணிக்கும் 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிட்டுள்ளதாக பள்ளிவாயல் நிருவாகத்தின் தலைவர் எ.எல்.தஸ்லிம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்நிதியின் மூலம் பள்ளிவாயலின் திருத்த வேலைகளும் கலாசார மண்டபத்தின் வேலைகளும் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம.நஸீர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீர் விஜயத்தினை மேற்கொண்டு அங்கு நடைபெறும் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டதுடன் இந்த வேலைகளை குறிப்பிட்ட சில வாரங்களுக்குள் செய்துமுடிக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் அவ்வாறு தவறும் பட்சத்தில் குறித்த பணம் திரும்பிச்செல்லும் நிலைமை ஏற்படும் எனவும் இந்த வேலைகளை மிக விரைவில் செய்து முடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தீவரப் படுத்துமாறும் பள்ளிவாயல் தலைவர் ஏ.எல்.தஸ்லிம் உள்ளிட்ட நிருவாகத்தினரிடம் வேண்டிக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago