2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

நெற்களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டில்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை, சவளக்கடை பிரதேசத்திலுள்ள நெற்களஞ்சியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டமாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெற்களஞ்சியசாலையிலுள்ள மின் ஆளி திடீரென்று தீப்பற்றி எரிந்து வெளியிலிருந்த மற்றுமொரு மின் ஆளிக்கும் தீ பரவியது. நெல் விற்பனைக்காக காத்திருந்த விவசாயிகள் தீ பரவுவதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து இலங்கை மின்சார சபையின் தகவல் வழங்கி மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், தீ பரவாமல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் களஞ்சியசாலைக்கும் அங்கிருந்த  நெல் மூடைகளுக்கும் எதுவித சேதமும் ஏற்படவில்லை.

மின்னொழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X