Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
நாட்டில் ஏற்பட்டள்ள வரட்சி காரணமாக அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல கிராமங்களில் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரு மாதமாக நாவிதன்வெளி குடியிருப்புமுனை, சவளக்கடை 7ஆம் கிராமம், வேப்பையடி அன்னமலை 15ஆம் கிராமம் உட்பட பல கிராமங்களில் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு நிலவிவருகிறது.
மேலும், குளிப்பதற்கு கூட நீர் இல்லாது குளங்களிலும் வாவிகளிலும் குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தொற்றநோய்பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வாய்க்காலில் வரும் நீர் நிறுத்தப்பட்டுள்ளமையினால் கிணறுகளில் இருக்கும் தண்ணீர் வற்றிவிட்டதாகவும் குடி நீரைப் பெற்றுக்கொள்ள நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதாகவும் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக நாவிதன்வெளிப் பிரதேசசெயலாளர் சு.கரன் கூறுகையில்,
இப்பகுதியில் வரட்சி நிலவி வருவதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது.இதனை நிவர்த்தி செய்வதற்காக மாவட்ட செயலகத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு பவுச்சர் மூலம் குடி நீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என்றார்.
13 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago