Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
கடந்த வருடம் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 22 பாடசாலைகளிலிருந்து 26 மாணவர்கள் இடைவிலகியுள்ளமை தெரியவந்துள்ளதாக அப்பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர் திருமதி ஏ.எம்.கஸ்பியா பீவி தெரிவித்தார்.
ஆகவே, இவ்வருடத்தில் இப்பிரதேச செயலகப் பிரிவில் பாடசாலைகளிலிருந்து மாணவர்களின் இடைவிலகலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரதேச செயலாளரின் வழிகாட்டலுடன் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவிலுள்ள உத்தியோகஸ்தர்கள் இணைந்து வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களை இனங்கண்டு அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல், அம்மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சாளம்பைக்கேணி -03 இமாம் கஸ்ஸாலி முன்பள்ளியில் திங்கட்கிழமை (08) பெற்றோர்களுடான ஒன்றுகூடல் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'பெற்றோர்களின் கவனக்குறைபாடு காரணமாகவே அதிகமான மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகுகின்றனர். ஆகையால், ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகள் விடயத்தில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
32 minute ago
35 minute ago
43 minute ago