எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜூலை 22 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, கல்முனைக்குடிப் பிரதேசத்தில் நேற்று (21) நண்பகல் வீடொன்றை உடைத்து, எட்டு இலட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் 7 பேர், கைதுசெய்யப்பட்டுள்ளனரென, கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டு உரிமையாளரால் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துரித விசாரணையின் போதே, சம்பவத்துடன் தொடர்புடைய எழுவரையும், கௌ்ளையிடப்பட்ட ஏழரைப்பவுன் நகைகளையும் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டார், திருமண நிகழ்வொன்றுக்குச் சென்றிருந்த வேளையில், அயல் வீட்டில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களே, குறித்த வீட்டை உடைத்து, நகைகளைக் கொள்ளையிட்டுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026