2025 மே 14, புதன்கிழமை

’நன்னீர் மீன்களின் விலை அதிகம்’

Editorial   / 2020 மே 13 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் நன்னீர் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக, நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

சம்மாந்துறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம், கிட்டங்கி பாலத்துக்கு அருகே  பிடிக்கப்படும்  சிறு மீன் முதல் பெரிய மீன்கள் என்றும் இல்லாத வகையில் விலை அதிகரித்துள்ளது.

குறித்த மீன்கள் யாவும் எறிதூண்டல்,  அத்தாங்கு, எறி வலை மூலம் பிடிக்கப்படுகின்ற போதும், ஒரு சிலரின் சட்டவிரோத இழுவை வலை, தங்கூசி பயன்பாடு மீன்களின் விலையேற்றத்துக்குக் காரணமென்று மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், நீர்வாழ் தாவரங்கள் அழிவடைந்துள்ளதாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து தொடர்ச்சியாக மீன்பிடி மேற்கொள்ளாமையும் வரட்சியின் காரணமாக ஆறுகள் வற்றி வருவதால் மீன்பிடி  குறைவடைந்துள்ளமையும் மீன்களின் விலையேற்றத்துக்கு காரணமாகும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X