2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா?

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஜூலை 08 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து அரசின் நிலைப்பாட்டை பொறுத்தே நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என தீர்மானிக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பாகிய நாங்கள் பலதரப்பட்ட அழுத்தங்களை அரசுக்குக் கொடுக்கவிருக்கின்றோம் எனவும்  தெரிவித்துள்ளார்.

அம்பாறை நாவிதவெளி பிரதேசத்திலுள்ள சொறிக்கல்முனை ஹோலி குறோஸ் வித்தியாலய வீதியை தார் வீதியாக புனரமைப்பதற்கான ஆரம்ப  நிகழ்வில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை    பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அந்தோனி சுதர்சன் தலைமையில்   நடைபெற்றநிகழ்வில்  தொடர்ந்து உரையாற்றிய கோடீஸ்வரன் எம்பி:   இந்த நாட்டின் அரசுக்கெதிராக கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவழிப்பதா? எதிர்ப்பதா?  என்ற பலவாறான கேள்விகள் உள்ளன என்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்ந்த பிரச்சினைகளையும்,  தாண்டி வடகிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளையும் எடுத்துக்கூறி அவற்றையும் நடைமுறைப்படுத்தாமல் இந்த அரசு தவிர்க்குமானால் அரசுக்கெதிராக சில நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்றும் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்,  அதில்  விஷேடமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்ற விடயத்தில் காத்திரமான அழுத்தத்தை இந்த அரசுக்கு கொடுத்து  நம்பிக்கையில்லா பிரேரணையில் ஆதரவு வழங்குவதா ? இல்லையா?  என கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்ந்த விடயமே தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கப் போகின்றது என்றார்.

இந்நிகழ்வில்  அடிகளார் இக்னேஷியஸ், அடிகளார்களான சகோதரிகள், நாடாளுன்ற உறுப்பினரின் செயலாளர் டி. சுரேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X