2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நல்லிணக்கத்துக்கான கோரிக்கைகளுக்கு நிபுணர் குழு தயார்

Princiya Dixci   / 2021 ஜனவரி 04 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன், மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனைத்து வகையான சமூக அநீதிகள் பற்றிய முறைப்பாடுகள், கோரிக்கைகள் மற்றும் மேன்முறையீடுகளைப் பொது மக்களிடமிருந்து பெற்று, அவற்றை ஆய்வு செய்து, பொருத்தமான பரிந்துரைகளை வழங்கவென நிபுணர்கள குழுவொன்றை, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் நியமித்துள்ளார்.

இதன்படி, கடந்த நான்கு தசாப்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட எந்தவொரு பிரிவினைவாத நடவடிக்கை அல்லது முறையற்ற செயற்பாடுகள் அல்லது சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளான தனி நபர்கள் அல்லது குழு தமது முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடிமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த வகையில் பாதிக்கப்பட்டார்கள் அல்லது  தொடர்ச்சியாக  பாதிப்புக்கு முகங்கொடுத்து வருபவர்கள்,  உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரபூர்வ ஆவணங்களை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

கோரிக்கைகளை செயலாளர், கிழக்கு மாகாணத்தினுள் சமூக அநீதிகளை ஆய்வு செய்வதற்கான நிபுணர்கள் குழு, ஆளுநர் செயலகம், கிழக்கு மாகாணம், உவர்மலை திருகோணமலை எனும் முகவரிக்கு இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை 026 2222102 எனும் தொலைபேசி இலக்கத்துடனும் அல்லது  cpgovernor@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .