2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நல்லிணக்கத்துக்கான பயணம் திருக்கோவிலை வந்தடைந்தது

Editorial   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.ஏ.றமீஸ், எஸ்.எம்.இர்ஷாத், பி.எம்.எம்.ஏ.காதர்

இலங்கை நாட்டில் வாழுகின்ற மூவன மக்களும் சமாதானத்துடன் வாழ வேண்டுமென்பதை வலியுறுத்தி, மக்களை விழிப்பூட்டும் நோக்கில், வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியா இளைஞன் முஹமட் அலி, சக்கர நாற்காலியில், இலங்கையைச் சுற்றி, சமாதானப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

தமிழ் டேடா மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் அனுசரணையுடனும் சமூக சேவைத் திணைக்களத்தின் ஆதரவுடனும், கடந்த 1ஆம் திகதியன்று, யாழ்ப்பாணத்தில் பயணத்தை ஆரம்பித்த இவர், நேற்று (09) திருக்கோவிலை வந்தடைந்தார்.

இப்பயணத்துக்கு சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் பெரும் ஆதரவையும் உதவிகளையும் செய்து வருகின்றனரென, முஹமட் அலி தெரிவித்தார்.

தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டுமென்பதையும் இப்பயணத்தின் போது, இவர் வலியுறுத்தி வருகின்றார்.

முஹமட் அலி, இலங்கை மின்சார சபையில் பணியாற்றிய போது ஏற்பட்ட விபத்தொன்றில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .