2025 மே 01, வியாழக்கிழமை

’நாட்டில் சிறந்த முறையில் அபிவிருத்தி முன்னெடுப்பு’

Princiya Dixci   / 2021 மார்ச் 09 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு சௌபாக்கிய திட்டத்தின் கீழ், நாட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதாக, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்டத்துக்கான எந்திரவியல் திரவிய பரிசோதனை ஆய்வு கூட மாவட்டக் காரியாலயத் திறப்பு விழா, அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்தில் இன்று (09) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் ஜெ. ஜெனார்த்தனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மக்களின் நலன் கருதி, அரசாங்கத்தால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்கொண்டு செல்லப்படுகின்றது. அந்த வகையில், கிழக்கு மாகாணத்திலும் கொவிட்-19 தொற்றுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக மக்களுக்கான சேவைகள் முன்கொண்டு செல்லப்படுகின்றது. 

“இதுபோன்ற அபிவிருத்தித் திட்டங்களை முன்கொண்டு செல்வதற்கு நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஒரே கொள்கையுடன் பயணிக்க வேண்டும். அப்போதுதான் எமக்கான அபிவிருத்திகளைப் பெற முடியும்.

“அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்கு, வீடு மற்றும் மலசல கூடங்களை கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

“கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் எந்திரவியல் திரவிய பரிசோதனை ஆய்வு கூடம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இயங்கி வருகின்றது. தற்போது அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இக்காரியாலயத்தை இங்கு கொண்டு வருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவரையும் பாராட்டுகின்றேன்" என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .