Editorial / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ்
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கல்முனை பிரதேச செயலகம், கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையம் ஆகியவற்றால் எற்பாடு செய்யப்பட்ட வீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச் செயலமர்வு, கல்முனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தில், இன்று (17) நடைபெற்றது.
இச்செயலமர்வு, கல்முனை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.இராஜதுறை தலைமையிலும் கல்முனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் விவசாய பொறுப்பதிகாரி கி.கிருத்திகாவின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்றது.
இதன்போது கலந்துகொண்ட பயனாளர்கள், தங்கள்வீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை செய்கையின் போது தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தெரிவித்ததுடன், இதற்கான தீர்வுகள், ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர்.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026