Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 28 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
உணவுப் பஞ்சத்தில் இருந்து நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டுமென தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தெரிவித்தார்.
சாய்ந்தமருது நகர சபை விடயமும் கால ஓட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் நேற்று (27) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ரணில் விக்ரமசிங்க ஆலோசனை சொல்லும் அளவுக்கு நாட்டின் பொருளாதார நிலைமை மாறிவிட்டது. ஏனெனில், ரணிலின் ஆட்சியில் தானே எமக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டன. இனவாதத்தை வைத்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.
“எமது கட்சி ஒரு தனி கட்சி. எங்களது கட்சியின் முக்கிய நோக்கம் நாட்டுப்பற்று ஆகும். இந்த நோக்கம் தான் அரசாங்கத்துடன் எமது கட்சியை ஒத்துப்போக வைக்கின்றது.
“எமது நாட்டுக்கு வெளிநாட்டு சக்திகளால் தீங்கு ஏற்படக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம். உலகம் தற்போது 3ஆவது போருக்காக தயாராகி வருகின்றது. இதில் யார் சண்டியர் என்பதை தேடி கொண்டிருக்கின்றனர்.
“எனவே, இவ்வாறான சண்டியர்களுக்கு ஆக்கிரமிக்கின்ற மற்றும் தேவைப்படும் இடமாக இலங்கை இருக்கின்றது என்பதை நாம் அறிவோம். கடந்த காலங்களில் எம்சிசி ஒப்பந்தம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க தான் தற்போது ஆலோசனை கூற வருகின்றார்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago