Princiya Dixci / 2021 ஜூன் 27 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
பொத்துவிலில் பிரசேதத்திலிருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்களும் நான்கு நாள்களாகியும் இதுவரை வீடு திரும்பவில்லையென உறவினர்கள் தெரிவித்தனர்.
பொத்துவில் அறுகம்பை மீன்பிடித் துறையிலிருந்து கடந்த புதன்கிழமை (23) அதிகாலை இயந்திரப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் களப்புக்கட்டு பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான மொகமட் தாஹா மற்றும் பொத்துவில் பசறிச் சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய மொகமட் ஜெளபர் என்பவரும் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன இரு மீனவர்களையும் மீனவர்கள், கடற்படையினர்கள் ஆகியோர் தேடி வருவததோடு, மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
26 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago