2025 மே 02, வெள்ளிக்கிழமை

நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தை புனரமைக்க நடவடிக்கை

பைஷல் இஸ்மாயில்   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிந்தவூர், பொது விளையாட்டு மைதானத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து, அதனைப் புனரமைப்புச் செயவதற்கான ஆரம்பகட்ட அளவியல் நடவடிக்கைகள், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தலைமையில் நேற்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சிரேஷ்ட நில அளவையாளர் இக்பால் ஹசனின்  திட்டமிலுடன் நவீனமயப்படுத்தப்படவுள்ள இந்த விளையாட்டு மைதானம், மிக முக்கியமாக புனரமைப்புச் செய்யப்படவேண்டியதொன்றாகக் காணப்படுகிறது.

அத்தோடு, கடந்த காலங்களில் அரசியல்வாதிகளால் வாக்குறுதி அழிக்கப்பட்டு, இறுதித் தருவாயில் புனரமைப்பு வேலைகள் தடைப்பட்டிருந்தன.

மேலும், மழைக்காலங்களில் இந்த மைதானம் வெள்ளக்காடாக காட்சியளிப்பதோடு, விளையாட்டு வீரர்களுக்கு பெரும் அசௌகரியங்களைத் தோற்றுவிக்கக் கூடியதாகவுள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையின் பராமரிப்பின் கீழ் காணப்படும் இந்த பொது விளையாட்டு மைதானம், விரைவில் பூரணமாக புனரமைப்பு செய்யப்படுமெனவும் மேற்குப்பக்கமாக ரசிகர்கள் போட்டிகளைக் கண்டு ரசிப்பதற்குப் பொருத்தமான அரங்கை அமைப்பதற்கும் மைதான அபிவிருத்தியில் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படுமெனவும் தவிசாளர் தாஹிர் தெரிவித்தார்.

இதன்போது, நிந்தவூர் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் வை.எல் சுலைமாலெவ்வை, பிரதேச சபை உறுப்பினர் ஏ. அஸ்பர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X