2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நிர்வாக உத்தியோகத்தர் பதவியேற்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாக உத்தியோகத்தராக காரைதீவைச் சேர்ந்த திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா, இன்று (09) பதவியேற்றுக்கொண்டார்.

இந்நியமனத்தை, பொது நிர்வாக அமைச்சு வழங்கியுள்ளது.

பதவியேற்பு நிகழ்வு, திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றதுடன், உதவிப் பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரனும் உடனிருந்தார்.

காரைதீவு பிரதேச செயலகத்தில் பதவிநிலை உத்தியோகத்தராகவிருந்த திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா அண்மையில் நடைபெற்ற போட்டிப்பரீட்சையில்  சித்தியடைந்தமையையடுத்து, நிர்வாக உத்தியோகத்தராக பதவியுர்வுபெற்றார்.

கொழும்பில் இருவாரகால பயிற்சியை கடந்த வாரம் நிறைவுசெய்தபின்னர் நேற்றுத் தனது கடமையை புதிய அலுவலகமான திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X