2025 மே 15, வியாழக்கிழமை

நிலக் கடலை அறுவடை விழா

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ.றமீஸ்

அம்பாறை மாவட்டத்தில் உப உணவு உற்பத்தித் திட்டத்தை ஊக்குவிக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ், பாலமுனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் வழிகாட்டல்களுக்கமைவாக, ஒலுவில் பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட நிலக்கடலை அறுவடை விழா, இன்று (15) சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.

பாலமுனை விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பு விவசாய போதனாசிரியர் ஆர்.விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற இவ் அறுவடை விழாவின்போது, அம்பாறை மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, அறுவடை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

உப உணவுப் பயிர்ச் செய்கை பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிஹார், ஒலுவில் பிரதேசத்துக்குப் பொறுப்பான பயிர்ச் செய்கை ஆலோசனை வழிகாட்டல்கள் தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர் வி.நிரூசன், அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எச்.ஏ.முபாறக் உள்ளிட்ட விவசாத்துறை உத்தியோகத்தர்கள், துறைசார் முக்கியஸ்தர்கள் எனப் பலர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .