2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நிலக்கீழ் வடிகான் இன்மை பிரச்சினைக்கு தீர்வு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் நிலக்கீழ் வடிகான் அமைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தால் 40 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளதாக, ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுனவின்  கல்முனை தொகுதி அமைப்பாளர்  றிஸ்லி முஸ்தபா, இன்று (16) தெரிவித்தார்.

மழை காலங்களில் வெள்ள நீர் காரணமாக பாடசாலை செயற்பாடுகள் சீரான முறையில் நடைபெறுவதற்கு தடையாக இருந்துள்ளதோடு, டெங்கு நுளம்பின் தாக்கம் மற்றும் துர்நாற்றம் காரணமாகவும் விடுதிகளில் தங்கி கல்வி கற்கும் மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும்  அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றதையடுத்து, மாகாண ஆளுநரின் நிதியிலிருந்து நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் நிலக்கீழ் வடிகான் அமைப்பதற்குரிய மதிப்பீட்டு அறிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்கான கட்டளையை, வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு ஆளுநர் பணித்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

நிலக்கீழ் வடிகான் நிர்மானிக்கப்படும் பட்சத்தில் மழை காலங்களில் வெள்ள நீர் கடலுக்குச் செல்லும் எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .