2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நிலத்தை மீட்பதற்காக நீதிமன்றத்தை நாட நடவடிக்கை

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை- பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஊறணி கனகர் கிராமத்து மக்களை, அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துமாறும் அம்மக்களுக்கு நட்டஈடு வழங்குமாறு கோரியும் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, கனகர் கிராமத்தின் முன்னாள் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும் கனகர் கிராம மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் செயலாளருமான வேலுப்பிள்ளை அருணாச்சலம், நேற்று (16) தெரிவித்தார்.  இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக, சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து கோமாரி, திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் அகதி முகாமில் வாழ்ந்து வந்ததாகத் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து 2009ஆம் ஆண்டு சொந்த இடத்துக்குத் திரும்பிய வேளை, பிரஸ்தாப பிரதேசம் வனவிலங்கு இலாகாவுக்கும் இராணுவக் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அதிகாரிகள் தங்களை மீளக் குடியேற விடாது தடுத்து விட்டதாக அவர் தெரிவித்தார்.   

நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, போராட்டங்களிலும் ஈடுபட்டு வருவதாகவும் மனித உரிமை மீறல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.   

எனவே நிலத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காகவும் விவசாயம் செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்யுமாறு கோரியும், உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X