Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 ஒக்டோபர் 16 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனையில் நிலவும் அரசுக்குச் சொந்தமான நிலப் பற்றாக்குறை காரணமாக, பணம் இருந்தும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் பாரிய சவாலை எதிர்நோக்கி வருவதாக, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
சீனாவின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படவுள்ள கல்முனை நகரத் திட்டமிடல் வரைபைத் தயாரிப்பது தொடர்பிலான மூன்றாம் கட்ட நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம், மேயர் செயலகத்தில் இன்று (16) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு மேயர் றகீப் மேலும் தெரிவிக்கையில்;
"எமது கல்முனை மாநகரில் காணிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு அரச நிலங்களை அடையாளப்படுத்தி, பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இருக்கின்ற சில காணிகளைக்கூட அபிவிருத்திக்காக எடுத்துக் கொள்வதில் பிரச்சினை காணப்படுகிறது. இதனால் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதிகள் திரும்பிச் செல்கின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது” என்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கல்முனை நகரத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைளைத் துரிதமாக முன்னெடுப்பது என்றும் பொது அபிவிருத்தித் திட்டங்களுக்கான காணிகளை அடையாளப்படுத்தி, அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான மூலோபாய ஏற்பாடுகளை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன், இவற்றுக்காக தொடர்புடைய அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
54 minute ago
2 hours ago