2025 மே 01, வியாழக்கிழமை

நீராடத் தடை; மீறினால் பிசிஆர்

Princiya Dixci   / 2021 ஜனவரி 06 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து, குளத்தின் நீர் வான் பாய்ந்து வருகின்றது. இதனைப் பார்ப்பதற்காக பெருமளவான மக்கள் ஒன்றுகூடிய நிலையில், அங்கு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச கொவிட் பாதுகாப்புச் செயலணி குழுவினர் தெரிவித்தனர்.

இதனை மீறிச் செல்வோருக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தெரிவித்தார். 

சாகாமம் குளத்தின் நீர் வான்பாயும் ரம்மியமான காட்சியை பிரதேச மக்கள் கடந்த மூன்று நாட்களாகப் பார்வையிட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, கொவிட் 19 அச்சம் காரணமாக, திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன், ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் மசூத்  மற்றும் பொலிஸார் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், சாகாம குளத்தை அண்டிய பிரதேசத்தில் நீராடச் செல்வதற்கும் தடை விதித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .