2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நீரில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை – பொத்துவில், கொட்டுக்கல் களப்பு நீரில் மூழ்கி, சகோதரர்கள் இருவர், நேற்று (17) மாலை உயிரிழந்துள்ளனரென, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு - தெமட்டகொடவைச் சேர்ந்த அஸ்வர் அறபாத் அலி (வயது-17), அஸ்வர் அப்துல்லா அலி (வயது-12) ஆகிய இருவருமே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தெமட்டகொட பிரதேசத்திலிருந்து, தமது குடும்பத்தாருடன் அறுகம்பைக்குச் சுற்றுலா வந்த மேற்படி சகோதரர்கள், தமது உறவினர் ஒருவருடன், கொட்டுக்கல் களப்புக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, இரு சகோதரர்களும், சிறிய வள்ளம் ஒன்றில் களப்பில் பயணித்த போது, யானை வருவதை அறிந்து, பீதியின் காரணமாகத் தடுமாறியதால் வள்ளம் கவிழ்ந்தமையால் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .