2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நீர் வழங்கல் திட்டத்தில் சிவப்பு நீர் விநியோகம்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கல் காரியாலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை நீர் வழங்கல் திட்டத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (12) மாலை முதல் நேற்று முன்தினம் (13) மாலை வரை அப்பகுதி நீர்ப் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்ட கறை படிந்த சிவப்பு நிற நீரினால் பல்லாயிரக்கணக்கான நீர்ப் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை கொண்டவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை நீர் வழங்கல் திட்டங்களுக்கு வழங்கப்படும் குடி நீரே கறை படிந்த பாவிக்க முடியாத நீராக வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையினால் நீர் பாவனையாளர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டு, செய்வதறியாது குடிப்பதற்கோ தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ முடியாமல் திண்டாடினார்கள்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் தற்போது முற்று முழுதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீரை நம்பியே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்கின்ற நிலையில், கடந்த இரு நாட்கள் இடம்பெற்ற இந்தச் சம்பவமானது பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பல இலட்சக் கணக்கான லீற்றர் நீர் பாதைகளிலும், தமது இருப்பிடங்களிலும் திறந்து விடப்பட்டது. இது பொதுமக்களின் நீர் கணக்குகளிலேயே கழிக்கப்படவுள்ளது.

எனவே, இந்தச் செயற்பாட்டை உடனடியாக விசாரணை செய்து, நீர்ப்பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு, உரிய அதிகாரிகளிடமும், அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .