Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூலை 07 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 38 வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களால் 01 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம். சாலிய பண்டார நவரத்ன இன்று (07) தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரமவின் ஆலோசனைக்கமைய கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, தெஹியத்தக்கண்டி ஆகிய நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புகளில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 91 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 38 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்தமை, நுகர்வோர் நலன் கருதி வர்த்தக நிலையங்களில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, நுகர்வுக்கு பொருத்தமில்லாத பொருட்களை காட்சிப்படுத்தியமை, காலவதியான பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்தமை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்கள் சுற்றிவளைப்பின் போது கண்டு பிடிக்கப்பட்டு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய பொருட்களை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பாக பொது மக்கள் 1977ம் இலக்கத்திற்கு அல்லது மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் 0632222355 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.எம்.ஹனீபா
4 hours ago
6 hours ago
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
19 Oct 2025