Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஜூலை 18 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று, பிரதேச செயலகத்திற்குட்பட்ட நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தினை கையளிக்கும் வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவர்களுக்காகன காணிக்கச்சேரி இடம்பெற்று வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளா் ரீ.ஜே.அதிசயராஜ் இன்று(18) தெரிவித்தார்.
கடந்த சுனாமி பேரலையினால், அக்கரைப்பற்று பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சவூதி அரேபிய அரசாங்கத்தினால் நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும் காணிக் கச்சேரி மூலம் காணி இல்லாதவர்களுக்கு வழங்குவதற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பீ வணிசிங்கவினால் நடடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று, பிரதேச செயலாளர் பிரிவில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரேபிய அரசாங்கத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டு 500 வீடுகள் மற்றும் பாடசாலை, மைதானம், சந்தை, சன சமூகம் நிலையம், நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட வீட்டுத் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு 12 வருடங்களுக்கு மேலாக உரியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இருந்து வருகின்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் இவ்வீட்டுத் திட்டத்தினை வழங்குமாறு பல்வேறு போராட்டங்களை நடத்திய போதிலும் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் எந்தவித முயற்சியினையும் முன்னெடுக்கவில்லை. இதனால் இவ்வீட்டுத் திட்டம் கையளிக்கப்படாமல் காடுவளர்ந்து வீடுகள் அழிவுற்ற நிலையில் காணப்படுகின்றன.
இவ் வீட்டுத்திட்டம் நீதிமன்ற தீா்ப்புக்கமைய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையின்போரில், காணி இல்லாதவர்களுக்கு காணி கச்சேரி மூலம் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
அதற்கயைம அட்டாளைச்சேனை பிரதேச செயலாளா் பிரிவின் அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, தீகவாபி ஆகிய கிராமங்களிலிருந்து 125 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று அவா்களுக்கான காணிக்கச்சேரி இடம்பெற்று வருவதாகவும் தொரிவித்தார்.
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago