Editorial / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
ஒலுவில் துறைமுகத்தின் நுழைவாயிலிலுள்ள மண்ணை அகற்ற வேண்டாமென, ஒலுவில் நடுத்துறை மீனவர் சம்மேளனத்தின் செயலாளர் ஐ.எல். நௌசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, துறைமுக, துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு இன்று (01) அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
துறைமுக துழைவாயில் கடல், மண்ணால் மூடப்பட்டு வருகின்றது. இவ்வாறு மூடப்படுவதனால் ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் தொடர் கடலரிப்பு குறைந்து வருகின்றது.
துறைமுக நுழைவாயிலிலுள்ள மண்ணை அகற்றும் பட்டசத்தில் மீண்டும் ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு ஏற்படும் அபாயமுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக நிர்மாணிப்பால், ஒலுவில் பிரதேசம் கடந்த 10 வருடங்களாக தொடர்ச்சியான கடலரிப்பால் பாதிக்கப்பட்டுவருகின்றது. இக்கடலரிப்பால் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் மக்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்டுள்ளார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, துறைமுக நுழைவாயிலிலுள்ள மண்ணை அகற்றுவதற்று எடுக்கப்படும் நடவடிக்கையை மீள் பரிசீலனை செய்யுமாறும், அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026