2025 மே 03, சனிக்கிழமை

நுழைவாயிலை திறக்குமாறு போராட்டம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூலை 26 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஒலுவில் துறைமுகத்தித்தில் வடக்குப் பக்கமுள்ள நுழைவாயிலைத் திறந்து தருமாறு, ஒலுவில் பிரதேச மீனவர்கள், துறைமுக நுழைவாயிலுக்கு முன்னால் நேற்று (25) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒலுவிலிருந்து மீன்பிடிப்பதற்காகத் துறைமுகத்துக்குச் செல்வதற்கு பாலமுனை ஊடாக 2 கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாதுள்ளதாகவும், தாம் பல அசௌகரிகங்களை எதிர்கொள்வதாகவும் மீனவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

வடக்குப் பக்கம் மூடப்பட்டுள்ள நுழைவாயிலைத் திறப்பதன் மூலம், இலகுவாகத் தாம் சென்று மீன்பிடிக்க முடியுமென, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

மூடப்பட்டுள்ள இந்த நுழைவாயிலைத் திறந்து, தமது அன்றாடத் தொழிலை மேற்கொள்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மீனவர்களால் இதன்போது மகஜரொன்றும் பிரதேச செயலாளரிடம் கையளிகப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X