Editorial / 2020 மே 19 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள பொது நூலகங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்று, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
நூலகங்களின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல், செயலக கேட்போர் கூடத்தில் இன்று (19 நடைபெற்றபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸ், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் உட்பட நூலகர்களும் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள நூலகங்களில் நிலவும் குறைபாடுகள், தேவைகள் தொடர்பில் நூலகர்களிடம் கேட்டறிந்து கொண்ட மேயர், முன்னுரிமை அடிப்படையில் கட்டம் கட்டமாக அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று அபாய சூழ்நிலை காரணமாக, மாநகர சபை எதிர்நோக்கியுள்ள நிதிப்பற்றாக்குறை காரணமாகவே நூலகங்களில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்த மேயர், நிலைமை சீரடைந்த பின்னர் அவர்கள் மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.
12 minute ago
14 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
18 minute ago