2025 மே 05, திங்கட்கிழமை

நேர்முகப் பரீட்சை

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஜனவரி 30 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு, புதிய மாணவிகளைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை, பொலிவேரியன் நகரிலுள்ள கல்லூரியின் நிர்வாகக் காரியாலயத்தில், எதிர்வரும் சனிக்கி​ழமையும் (02)  ஞாயிற்றுக்கிழமையும் (03) முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய, அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவிகள், உரிய ஆவணங்களுடன் நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளிக்க முடியுமென, கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு தொடக்கம் தனியார் கட்டடத்தில் இயங்கி வந்த இக்கல்லூரி, பொலிவேரியன் நகரில், அனைத்து வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் தொகுதியில் தற்போது இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X