Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 09 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
அம்பாறை மாவட்ட மக்களை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள எல்லைப்புறக் கிராமங்களான மண்டானை, காயத்திரிபுரம் ஆகியனவற்றில் வாழும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, ஆயுர்வேத மூலிகைப் பொதிகள், இன்று (09) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாளாந்தக் கூலித் தொழிலை பெருமளவில் மேற்கொண்டு வரும் மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் நிலைமையைக் கருத்திற்கொண்டு, மருந்துப் பொதிகளை, மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டன.
இவ்வேலைத்திட்டம், கிழக்கு மாகாண ஆயுர்வேதத் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ், கல்முனை பிராந்திய சுதேச வைத்தியத்துறை இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான எம்.ஏ.நபீல் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள், கொரோனா தொற்றிலிருந்து எவ்வாறு தம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பில் விசேட அறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் சுகாதாரத் துறையினரால் இதன்போது வழங்கப்பட்டன.
திருக்கோவில் ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளான ஐ.எல்.அப்துல் ஹை, ஆர்.கோபிநாந், திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் கே.சதீஸ்கரன், சுகாதாரத் துறையினர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago