2025 மே 05, திங்கட்கிழமை

நோய்வாய்ப்பட்டிருந்த கோழிகள் மீட்பு

Editorial   / 2019 மார்ச் 22 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத நோய்வாய்ப்பட்டிருந்த கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்யவிருந்த கோழிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், பொத்துவில் பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம். அப்துல் மலீக் தெரிவித்தார்.

கல்முனைப் பிரதேசத்திலிருந்து பொத்துவில் பிரதேசத்தில் உள்ள கோழி இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு இன்று, (22) லொறியில் கொண்டு சென்ற கோழிகள் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத வகையில் நோய் வாய்ப்பட்டிருந்த அதேவேளை, இறந்து காணப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

பொது மக்கள் செய்த முறைப்பாட்டையடுத்து, மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே, நுகர்வுக்குப் பொருத்தமில்லாமலும், இறந்த நிலையிலும் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையிலும் காணப்பட்ட கோழிகள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட கோழிகள் அழித்தொழிக்கப்பட்டுள்ளதாகவும், நுகர்வுக்குப் பொருத்தமில்லாத கோழிகளை விற்பனை செய்த நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X