2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புதுக்காட்டுவெளிவட்டை நெற்செய்கைக் காணிகளின் உறுதிப்பத்திரங்களை ஒப்படைக்குமாறு பணிப்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 04 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, உகணப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொட்டாச்சுருங்கி புதுக்காட்டுவெளிவட்டை நெற்செய்கைக் காணிகளின்  உறுதிப்பத்திரங்களை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் அம்பாறை மாவட்டச் செயலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி.வணிகசிங்க பணித்துள்ளார்.  

சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம்களுக்குச் சொந்தமான 164 குடும்பங்களுக்கு 48 ஏக்கர் காணிகளுக்கு 1960ஆம் ஆண்டு கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தன.

1980ஆம் 1983ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இக்காணிகளுக்குப் போகமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது இக்காணிகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலரால் அபகரிக்கப்பட்டுள்ளது. உரிய விவசாயிகளை இக்காணிகளுக்குள் சென்று வேளாண்மை செய்வதற்கு சிலர் தடை ஏற்படுத்தி வருகின்றனர்.

2006ஆம் ஆண்டுக்கு முதல் சம்மாந்துறைப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்டிருந்த இக்காணிகள் திடீர் என்று உகணப் பிரதேச செயலகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, இக்காணிகளை உரிய விவசாயிகளுக்கு மீள பெற்றுக்கொடுப்பதற்கான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (04) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோதே, அரசாங்க இவ்வாறு பணித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சமத்துவமான நீதி வழங்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .